அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 27 July 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பறவையின் முனகல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஏ.ஜோய்  
Friday, 28 September 2007

என்னை இழந்துபோகா
சாத்தியங்களை
தக்கவைக்கும் அவஸ்தை
பாழ்வெளியில் காயப்பட்ட
பறவையின்
முனகலாய் ஒலிக்கின்றது..

அந்தகாரம்
சூழும் பொழுதுகளில்
இயற்கை தன் கண்களை
பிடுங்கி எறிகிறது...

கழன்று வீழும்
நாளிதழ் ஒன்றில்
எழுதப்பட்ட வாசகம்
குப்பையில் வீசப்படுவதுபோல்
காலத்தின் மடியில் நான்...

கனன்றெரியும் எரிமலையின்
தீப் பிளம்புகளின்
சூட்டின் தகிப்போடு
வாழ்தல் பற்றி தேடல்
எனக்குள் நிகழ்கிறது...
27-05-07

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  25426451 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4070 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com