அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 01 October 2022

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 41 arrow சீனாவில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சீனாவில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஜெமினிதனா  
Sunday, 23 December 2007

சாய் ஜுன் என்கிற வாணி..
குவாங் - லீ என்கிற விஜயலட்சுமி..
கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதுதானே! இவர்கள் பேசும் தமழைக் கேட்டால் வியப்பாகவும் இருக்கின்றது.
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் ஆங்கிலம் கலக்காத தித்திப்புத் தமிழில் நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கும் வாணியும் விஜயலட்சுமியும் முதல் முறையாக சென்னை வந்திருக்க, அவர்கள் தங்கியிருந்த அறைக்கே போய் ஒரு பூச்செண்டு சந்திப்பு நிகழ்த்தினோம்.
"எங்க சீன வானொலி உலகளாவிய அளவுல மொத்தம் 43 மொழிகள்ல நிகழ்ச்சிகளை வழங்குது. உலத்துல எல்லா நாடுகள்ல இருந்தும் அதைக் கேட்க முடியும். இந்தியாவுல தமிழ், இந்தி, உருது, வங்காளம்னு நாலு மொழிகள் மட்டும்தான் அதுல அடக்கம். முக்கியமா தமிழ் எங்க எல்லாருக்கும் பிடிச்ச மொழி. அதுக்குக் காரணம் உங்களுடைய மொழிப்பற்றுத்தான். இன்னொண்ணு தெரியுமா? அதிகமான நேயர்கள் விரும்பிக் கேக்கிற மொழி நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தினா தமிழ் மூணாவது இடத்துல இருக்கு." என்று அவர்கள் சொல்லச் சொல்ல நமக்குள் பெருமிதம் பூரிக்கின்றது.
"ஒரு நாளைக்கு நாலு மணி நேரம்தான் எங்களுடைய தமிழ் நிகழ்ச்சிகள் வருது. ஆனா அதுக்கே இந்தியாவில் எத்தனை ரசிகர்கள் தெரியுமா? ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கடிதங்கள் இந்தியாவுல இருந்து எங்களுக்கு வருது" என்கிற வாணி, சீன வானொலி தமிழ் பிரிவின் துணைத் தலைவராம்.
" எங்களுடைய பிரிவில் மொத்தம் 14பேர் வேலை பார்க்குறாங்க. ஆனா அதில் தமிழர்ள்னு யாரும் இல்லை. பிறப்பால் எங்க மொழி சீனம் என்றாலும் எங்க பெயா உட்பட எல்லாத்தையும் தமிழா மாத்திட்டிருக்கிற தன்மைதான் இங்கிருக்கிற நேயர்களுக்கு பிடிச்சிருக்குனு நினைக்கிறன். எங்க தமிழ்ப் பிரிவு நிகழ்ச்சிகளுக்கு இங்கே ரசிகர் மன்றமே இருக்குன்னா பார்த்துக்கங்களேன்" என்ற விஜயலட்சுமி சொல்ல ஆச்சர்யமாகி விவரம் கேட்டோம்.
"தமிழ்நாட்டுல ஒவ்வொரு மாவட்டத்துலயும் 'சீன வானொலி நேயர் மன்றம்'னு ஒரு அமைப்பை எங்க நேயர்களே அமைச்சிருக்காங்க. அவங்க ஏற்பாடு பண்ணியிருக்கிற ஒரு கருத்தரங்கத்துல கலந்துக்கத்தான் இப்போ எங்களை அழைச்சிருக்காங்க" என்ற வாணி 'அடடா நேரமாச்சு' என்று வாட்சைப் பார்த்தபடி அவசரம் காட்ட, நாமும் விடை பெற எழுந்தோம்.
"கொஞ்சம் இருங்க.. எங்க நிகழ்ச்சியை எப்படி கேக்குறதுனு சொல்லலையே. எலெக்ட்ரானிக்ஸ் கடையில சிற்றலை ரேடியோனு கேட்டு வாங்கினீங்ன்னா போதும். அதுல உலக அளவிலான வானொலி நிகழ்ச்சிகள் எல்லாத்யும் கேக்க முடியும். காலை 7.30 மணியில இருந்து 9.30 மணிவரை.. மாலை 7.30 மணியில இருந்து 9.30 மணி வரை..எங்க குரலையும் நீங்க கேட்கலாம். நேரில் பேசுவதைவிடவும் நிகழ்ச்சி நடத்தும்போது நாங்கள் தூய்மையான தமிழில்தான் பேசுவோம்.அதனால கண்டிப்பா கேக்கணும்" என்று அன்புக் கட்டளையிட்ட பிறகே நம்மை வழியனுப்பினார்கள் இருவரும்.
தெருவில் இறங்கி நடக்ககையில் "ஹெல்லோ.. யாரு பேஸ்றது? எப்படி இர்க்க்கீங்க? உங்ளுக்கு எந்த பட்துல இர்ந்து ஸாங் வேணும்?" என்று நம்மூர் எஃப்.எம் ஒன்றின் ஒலி காதைத் துளைத்தது.

நன்றி:அவள்விகடன்
படம்: கே.கார்த்திகேயன்

 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 01 Oct 2022 22:20
TamilNet
HASH(0x55d10434acb0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 01 Oct 2022 22:20


புதினம்
Sat, 01 Oct 2022 22:43
     இதுவரை:  22722938 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 8297 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com