அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 08 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நல்ல நண்பன்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 24 December 2007

ஏகாந்தம் இனிது
எனச் சொன்னாள் அவ்வை.
ஏகாந்தம் தனிமை இரண்டுமே ஒன்றா?

நான் நானாகவே
என்னைத் தனிமைப் படுத்தல்தான்
ஏகாந்தமா?

பிறரால் நான் தனித்து விடும்போதுதான்
நான் தனிமைப் படுகிறேனா?

எவரும் என்னை பொருட்படுத்தவில்லை
என்பதை உணர்கையில்
நான் அடையும் தனிமை
சோகம் தருவதுதான்!

ஆனால்,

நானே யாவற்றையும் விட்டொதுங்கித்
தனியே இருக்கும்போது
நான் அனுவவிக்கும் உணர்வு
அதுதான் ஏகாந்தமாக இருக்க வேண்டும்!

எனவே ஏகாந்தம் இனிதுதான்.

ஏன்?

எல்லா உறவுகளும், நட்புகளும்
என்னை மறந்து பிரிந்துவிட்ட வேளையில்
என்னுடன் கூடவே இருக்கின்ற
இறுதி நண்பன் ஏகாந்தமே!

இந்த நண்பன்
என் நினைவுகள் மறையும் வரையில்
என்னுடன் கூடவே இருப்பான்!

இவன்வேறு, என் நினைவுகள் வேறு அல்ல!

என் நினைவுகள்தான் எனது நல்ல நண்பன்.
ஆனால், எனது நினைவுகள்தான் நான்.

எனவே நல்ல நண்பன் நானேதான்!


     இதுவரை:  25811417 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6521 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com