அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கறுப்பு இலக்கியத்தின் கலாச்சார பின்னணி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஆங்கிலத்தில் - செனதொரதெனிய  
Tuesday, 06 July 2004
பக்கம் 2 of 2
(03)


~நீக்குரோ உணர்வு| என்று அறியப்பட்ட இலக்கிய எழுச்சி பிரெஞ்சு மொழி வழங்கும் ஆபிரிக்காவில் செல்வாக்குச்செலுத்தியது. இது நீக்குரோ ஆபிரிக்காவின் கலாச்சார மறுமலச்சியை நோக்கமாகக் கொண்ட கருத்தியல் இயக்கமாகும். நீக்குரோ உணர்வு என்ற சொற்றொடர் கவிஞராயும், அரசியல்வாதியாகவும் இருந்த எய்மே சீசெய்யர் என்பவரால் பயன்படுத்தப்பட்டதாகும். இதன் கருத்தியல் செனகால் நாட்டின் கவிஞராயும் அரசியல்வாதியுமாக இருந்தவரும்,  பிற்பாடு அந்நாட்டின் ஜனாதிபதியாக வந்தவருமான லியோபோல்ட் செடார் செங்கோரினால் வரையப்பட்டது. செங்கோரின் கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் தத்துவ ஆசிரியரும் எழுத்தாளருமான ஜீன் போல் சாத்ரோ நீக்ரோ தன்மை பற்றி விளக்கி எழுதியுள்ளார். ஆயினும் இதை எல்லா எழுத்தாளர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. இதை அவர்கள் இனவாதமென்றும், பிற்போக்குவாதம் என்றும், மேலோங்கிவரும் பூச்சுவாக்கள் ஆபிரிக்காவின் வெகுஜனங்களையும் புத்திஜீவிகளையும் உணர்ச்சி வசப்படுத்தி மட்டந்தட்டுவதற்கான ஓர் முயற்சி யெனக்கூறி  மறுதலிக்கின்றனர். ஆயினும் நீக்குரோ உணர்வு ஆபிரிக்க மண்ணின்மீதும், வளத்தின்மீதும் துடிப்பு மிக்க மானுடத்தின்மீதும் நெருங்கிய பிணைப்புக்கொண்டு கலைகளை போற்றிப் புகழ்கின்றது. காலனித்துவத்திற்கான எதிர்வினையாக நீக்குரோ உணர்வுக் கவிஞர்கள் நீக்குரோவின் தோற்றப் பொலிவினையும் உடல் வனப்பையும் அதன் பெண்மையின் அழகையும் பாடி பரவசமடைகின்றனர்.

அமெரிக்க நீக்குரோ துருப்பினரை அமெரிக்கா அணியுடையுடனும் போர் உபகரணங்களுடனும் செங்கோர் கண்டபோது கொங்கோ நாட்டின் நீர்விழ்ச்சிகளின் ஆர்ப்பரிக்கும் ஒசை காதில் கேட்கிறது என்றார். நியுயோக் என்ற மகுடமிட்ட கவிதையில் உனது இரத்தத்தில் கறுப்பiயும் பாயவிடு அது உருக்கு இணைப்புகளில் துருவை துடைக்கும். அது உயிரின் எண்ணெய்போல் உனது பாதங்களின் அடித்தளங்களின் குறுக்குப் பட்டைகளாகவும் இணைப்புக் கம்பிகளாகவும் இருக்கும். நீக்குரோ உணர்வு மேற்கு மனப்பான்மையும் ஆபிரிக்க சுய கலாச்சாரத்தை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

மேற்கு ஆபிரிக்காவில் ஆங்கிலம் வழங்கும் இடங்களில் நீக்குரோ உணர்வின் பாதிப்பு முதன்மையற்றதாகவும், குறைவானதாகவும் உள்ளது. வோல்சொய்ங்கா நீக்குரோ உணர்வை கடுமையாக கண்டிக்கிறார். மற்றவர்கள் நீக்குரோ உணர்விற்கு பதிலாக ஆபிரிக்க சாhர்புத்தன்மையை முன்வைக்கின்றனர். எவ்வாறாயினும் நீக்குரோ உணர்வு பிரெஞ்சு வழங்கும் பிரதேசங்களில் படைப்புச் சிந்தனைகளுக்கு தீவிர உந்துதலாக இருக்கின்றது.

அதைப் பற்றிய பிழையான தோற்றத்தினையே தங்களது புனை கதைகளிலும் மற்றும் எழுத்துக்களிலும் வெளிப்டுத்தினர். கறுத்த மனிதனின் பிம்பம் எவ்வாறு வெள்ளை மனிதனின் மனதில் பதிந்துள்ளது என்பதை, ஆபிரிக்கா பற்றிய ஐரோப்பிய இலக்கியப் பிரதிகள் பிரதிபலிக்கின்றன. உயிர் கொல்லி காய்ச்சலின் விளைநிலம், வெள்ளயைரின் புதைகுழி, எதிர்பாராத இயற்கை அனர்த்தங்களும் ஒழுக்கமின்மையும், விகாரமான மனிதர்கள் மலிந்த பூமி, இழிநிலை அடிமைத்தனம், இருண்மை, புதிர் விலங்கு மனிதன், பலதார மணமுறை, மிருகபலம், நரமாமிசபட்சனி என்றவகையில் ஆபிரிக்காவின் பிம்பம் காட்டப்பட்டது. இவ்வாறு காலனித்துவ எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டிருந்த பிம்பத்தை கழைவதற்கு அச்சமயம், கூகியும் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பலருக்கு ஆபிரிக்கா இருண்ட கண்டமாகவே இருந்தது. ஹெகல் கூட இருண்ட இரவின் போர்வை போர்த்திய ஒரு குழந்தைப்பருவ நாடாக ஆபிரிக்காவை கருதினார் ஆபிரிக்காவிற்கு அதன் புவியியல் இருப்புக்கூட மறுதலிக்கப்பட்டது. அதனால் எகிப்து ஆபிரிக்காவிலிருந்து. விலக்கப்ட்டது. வட ஆபிரிக்காவில் நிலவிய மத்தியதரக்கடல் சுவாத்தியமும், அங்கே செழித்தோங்கியிருந்த நைல் நதிப்பள்ளத்தாக்கு நாகரிகமும் இந்த விலக்கலுக்கு காரணமாக இருக்கலாம். ஆயினும் ஆபிரிக்கா ஏய்யோ, மாலி, பெனின் போன்ற பெருமைமிக்க நாகாPகங்களைக் கொண்டிருந்தமையை யாரும் மறுக்க முடியாது. மனித சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ள ஆபிரிக்காவிற்குமாத்திரம்தான் அடிமைநிலை பொருத்தமானதென ஹெகல் கூறினார். பாரம்பரிய ஆபிரிக்கச் சடங்குகளை, நாடகங்களை மரபுகளை பிசாசுகளின் வேலைகள் என்று கிறிஸ்தவ மிஷனெறிமார் முகம் சுழித்தனர். சொயிங்காவின் மரணம், அரசனின் குதிரைக்காரன் என்ற தாக்கம் மிக்க நாடகத்தில் காலனித்துவ கால மாவட்ட அதிகாரியும் மனைவியும் பாரம்பரிய ஜெகோ முகமூடிகளை அணிந்து நடனமாடுகின்றனர். அண்மையில் ஆபிரிக்ககலையை புறந்தள்ளியமையால் காலனித்துவ வாதிகள் பிக்காஸோ தோன்றுவதற்கு முன்பே அவரின் கலையை மறுதலித்துவிட்டனர். கூகிகாலனித்துவ எழுத்துக்களில் நல்லவர், கெட்டவர் என்ற இரு வகை ஆபிரிக்கர்களை இனம் காண்கிறார். நல்லவர்கள் காலனியவாதிகளுடன் ஒத்துழைப்பவர்கள் அதாவது பிரதானமாக அவர்களுக்கு ஆபிரிக்காவை ஆள ஒத்தாசை   புரிபவர்கள் அப்படிப்பட்டவர்கள் புத்திசாலியாகவும், பலசாலிகளாகவும், அழகானவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். ஆனால் வெளி நாட்டவரின் ஆதிக்கத்தை எதிர்ப் பவர்கள் கெட்டவர்கள் பாhத்திரத்தைப் பெற்றனர் சியாராஷியெனைச் சேர்ந்த எழுத்தாளர் நிக்கோல் கூறுவதுபோல காலனித்துவ   எழுத்தாளர்கள் மிக அரிதாகவே ஆபிரிக்கபாத்திரங்களை உயர்குல சீலர்களாக சித்தரித்தனர். பெரும்பாலும் காட்டுமிராண்டிகளாகவும், சேவகர்களாகவும், சேதம் விளைவி;ப்பவர்களாகவும் சித்தரிக் கப்பட்டனர்.

ஆபிரிக்க எழுத்தாளர்களின் பணி இந்த தவறான அபிப்பிராயங்களைக் கழைவதாகவும், ஆபிரிக்கா ஒரு மகோன்னத வரலாற்றையும், கலாச்சாரப் பெருமையையும் கொண்டிருந்தது என்று காட்டுவதாயும் இருந்தது. ஒரு புதிய தேசத்தின் எழுத்தாளர்களின் பங்கு என்ற தனது கட்டுரையில் அச்சுபே ஐரோப்பா, ஆபிரிக்கர்களை எப்படி கலாச்சாரமற்ற மனிதர்களாக காட்டியது என்பதற்கு பல உதாரணங்களை எடுத்துரைக்pன்றார். ஆபிரிக்கா மக்கள் கலாச்சாரம் என்பதை முதற்தடவையாக ஐரோப்பியர்களிடமிருந்துதான் கேட்கவேண்டிய தேவை இருக்கவில்லை. அவர்களின் சமூகங்கள் அப்படி உணர்வற்றதாக இருந்ததில்லை. அழகும் மதிப்புமிக்க தத்துவஞானத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். அவர்களிடம் கவிதை இருந்தது. அவர்கள் கௌரவமிக்கவர்களாக இருந்தனர். தங்கள் கௌரவத்தை காலனித்துவ காலத்தில் இழந்துவிட்டனர். அதை அவர்கள் மீண்டும் பெறும்காலம்  இதுவாக இருக்கவேண்டும். ஒரு சமூகத்தின் மோசமான இழப்பு அவர்கள் தங்கள் சுயகௌரவத்தையும் பெருமையையும் இழந்து போவதுதான். ஒரு எழுத்தாளரின் கடமை இழந்தவைகளை மீட்டெடுப்பதற்கு உதவுவதும் அவர்கள் எதை இழந்தார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்று காட்டுவதும்தான். அச்சுபே இப்போ மக்களின் பழமொழியை மேற்கோள் காட்டியவாறு மேலும் தொடங்கினார் எங்கே தான் மழையில் நனைந்தேன் என்பதை அறியாத மனிதன் எங்கே போய் தன்னை உலர்த்திக் கொள்ளலாம் என்பதையும் அறியான். வரலாறு பற்;றிய சரியான பார்வையில்லாமல் இக்காரியத்தை ஆபிரிக்க எழுத்தாளர்களால் முன்னெடுக்க முடியாது என்று அச்சுபே முத்தாய்ப்பு வைக்கின்றார். அவர் கலாசார பாரம்பரியத்தை மீட்டெடுப்பது பற்றி நன்கு விளங்கிக் கொண்டுள்ளார். 1958 இல் வெளிவந்த சரித்திரம் படைத்த பொருட்கள் சிதறி விழுந்தன என்ற முதல் நாவலும் கடவுளின் அம்பு என்ற மூன்றாவது நாவலும் இதற்கு நல்ல உதாரணம். பொருட்கள் சிதறி விழுந்தன 40ற்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. அச்சுபே எழுதுகிறார் என்னுடைய நாவல்கள் (விசேடமாக கடந்த காலம் பற்றிய) கடந்தகாலத்திற்கும் அப்பால் பலவற்றை எனது வாசகர்களுக்கு உணர்த்துமானால் நான் மிகுந்த திருப்தி அடைவேன். ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட பாங்கான இருண்ட வாழ்க்கையை கடவுளின் பெயரால் மீட்டெடுக்க வேண்டிய ஒரு வாழ்க்கையை இம் மக்கள் கொண்டிருக்கவில்லை என்பதும் சலக குறை நிறைகளுள்ளதுமான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர் என்பதுமே அவையாகும். அவர் மேலும் சொல்கிறார். நாங்கள் சொல்லும் கதை எவராலும் எவ்வளவு சிறப்பானதாகவும் சீரானதாகவும் இருந்தாலும் சொல்லப்படமுடியாததாகும். பொருட்கள் சிதறி விழுந்தன நூல் கடந்த காலத் தவறுகளுக்கு கழிவிரக்கம் கொண்டு கழுவாய் தேடும் எத்தனமாக அவர் கருதுகிறார். இப்போ கலாச்சாரமும் நாகரிகமுமே தனது எழுத்துக்களின் அடித்தள ஊற்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிரஞ்சில் எழுதும் கமறு}ன் எழுத்தாளர் கமராலேயே 1972 ல் கூறினார். இக்கலாச்சாரத்தின் வனப்பையும் வளத்தையும் எனது நாவல்கள் எடுத்துரைக்கின்றன. ஆபிரிக்கா தனக்கு உரிய கலாச்சாரத்தைக் கொண்டது என்பதை அறியாத மக்களுக்கு அவை அதன் பழைய பாரம்பரியத்தையும் நாகரிகத்தையும் உணர்த்துகின்றன. இந்தப் பங்களிப்புத்தான் ஆபிரிக்க இலக்கியத்தில் மிகக் காத்திரமான பணி என்று நான் நம்புகிறேன். நூற்றாண்டு காலமாக காலனியத்தால் உருவாக்கப்பட்ட பொய்மைகளையும் கற்பிதங்களையும் களைந்து மக்கள் இழந்து போன வாழ்வியலை தம் படைப்புகளில் மீட்டுருவாக்கிக் காட்டுதலே ஆபிரிக்க எழுத்;தாளர்களின் கடமை என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டு வாசகர் படிப்பினை பெறவும் வெளிநாட்டு வாசகர் தெளிவு பெறவும் முடியுமென கருதப்பட்டது. இதனால் சில மேல்நாட்டு விமர்சகர்கள் ஆபிரிக்க எழுத்தாளர் நாவல்கள் பிரச்சாரத்திற்காக கலையம்சத்தைக் காவுகொடுத்து விட்டன.  என ஒதுக்கித் தள்ளி; இதை ஆபிரிக்க எழுத்தாளர்கள் கடுமையாக மறுதலித்தனர். இலங்கையிலும
கூட சில அரைவேக்காட்டு விமர்சகர்கள் சிங்களத்தில் வெளிவரும் ஜனரஞ்சப்பாணி போன்றதென்று அச்சுபேய்க்கு முத்திரை குத்தினர். ஒரு ஆபிரிக்க எழுத்தாளருக்கு வரலாறு பற்றிய கரிசனையும் கலாசார தேசிய உணர்வுகளும் தவிர்க்க முடியாததாகும். ஆபிரிக்க எழுத்தாளரின் கற்பனை ஆபிரிக்க பாரம்பரியத்தில் நிலைகொண்டது. அப்பாரம்பரியம் கலையை காலானுபவத்திற்கு மாத்திரம் வைத்துக் கொள்ளவில்லை. செயல்மதிப்பிற்காகவும், பயன்மதிப்ப்pற்காகவும் கலையை பயன்படுத்தி வந்தது. எழுத்தாhளன் எங்கே மழை பொழியத் தொடங்கியது என்று மக்களுக்குச் சொல்லுதல் வேண்டும். அவர் முரண்பாட்டினதும், எதிர்வினதும் உண்மையான காரணங்களை வெளிப்படுத்த வேண்டும். இவைகள் ஆரம்பகால எழுத்துக்களின் தொனிப்பொருளாகவும், பின்னனியாகவும் இருந்தன. ஆபிரிக்க அழகியலின் அடிப்படையில் வரும் கலாச்சார அனுகுமுறை அவ்விலக்கியத்தை விமர்சிக்க பொருத்தமானதென விமசகர்கள் கருதுகிறார்கள் ஆபிரிக்க நாவலின் கலாச்சார பின்னணியின் பண்புகளே அதனை வித்தியாசமாக்கின்றது. அது ஆபிரிக்கப் பொருளை ஆபிரிக்கா அல்லாத ஊடகத்தில் வெளிப்- படுத்துகின்றது.  ஆபிரிக்க காலனித்துவப் பாரம்பரியம் இந்த மொழியைத் தேர்கிறது.  ஆபிரிக்கத்தன்மையை வெளிநாட்டு மொழியில் வரையயறுக்கின்றனர். ஆனால் அதன் பொருள் கருத்துக்கள் பின்னணி உணர்வு யாவும் ஆபிரிக்காவிற்கு உரியது. பல எழுத்தாளர்கள் தாம் தழுவியமொழியை உள்ளுர் மயப்படுத்தியுள்ளனர். சிதைவு அல்லது கலப்பு மொழி வழக்கை பயன்படுத்தும் போக்கு பெருகிவருகிறது. புகழ்மிக்க எழுத்தாளரான அச்சுபே, சொய்ங்கா, எக்லென்சி, கூடசிதைவு மொழியை பயன்படுத்துகின்றனர். இரவல் மொழியை தங்களது சொந்த மொழியைப் போல உபயோகிக்கும்போது பல பிறழ்வுகள் ஏற்பட சாத்தியமுண்டு. நைஜீரியாவில் புதியவகை ஆங்கிலம் இப்போ இங்கிலீஸ் உருவாகியுள்ளது.

 
(04)

ஆபிரிக்காவின் வளமார்ந்த வாய்மொழி மரபு அதன் இலக்கியத்திற்கு ஒரு தனித்துவத்தையும் வீரியத்தையும் கொடுக்கின்றது. தாம் முழுவதுமாக பெற்ற இந்த  வாய்மொழி விபரிப்பு முறைகளை கலை உத்திகளாக எழுத்தாளர்கள் பயன்படுத்துகின்றனர். அச்சுபே, சொய்ங்கா, கூகி, ஓக்கற்பிற்றக், லென்ஜி, சுமாடியா, கடைசியாக லோறா, புளோராவாப்பா போன்ற முன்னோடி எழுத்தாளர்கள் உட்பட பலர் இந்த வாய்மொழி வழக்காற்றிலிருந்து உந்துததல் பெற்று கிளர்ந்தவர்களே. பாரம்பரிய கலை வடிவங்கள் ஆபிரிக்க கவிதையை பெரிதும் பாதித்துள்ளது. கோவிஏலோறு (கானா) ஒகேட்பிற்றேக் (உகண்டா) ஜேடி கிளார்க், கிற்ஸ்தோபர் ஒக்கிப்போ (நைஜீரியா) ஆகியவர்களை உதாரணமாகக் கொள்ளலாம். கடைசியாக கூறப்பட்டவர் பியாப்டிறாவிற்கான சண்டையில் கொல்லப் பட்டுவிட்டார். கானா நாவலாசிரியர் ஐ-இக்விஆம்கா பாரம்பரிய கதை சொல்லியின் உக்த்தியை நாவல்கள் சிலவற்றை விபரிப்பதற்கு பயன்படுத்தியுள்ளார். சொயிங்கா தனது நவீன நாடகத்திற்கு நாட்டுப்புற உபகரணங்கள், புராணக்கதைகள், நடனம், பாட்டுக்கள், சடங்குகள் என்பவற்றைக் கையாண்டுள்ளார். அச்சுபேயின் கதையாடல்களில் இப்போ பழமொழிகளும் உவமைகளும், விரவிக் காணப்படும். இவ்வாறு இவைகளை அச்சுபே கையாண்டுள்ளார் என்பதைப்பற்றி பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. கூகியின் பாங்கு சிக்குயி நாகரிகத்தில் வேர் கொண்டது. அச்சுபே சியெல் இன்னஸ் என்பவரோடு சேர்ந்து பதிப்பித்த சிறுகதைகள் என்ற நூலின் முன்னுரையில் கூறுகிறார். நாவல்களும் சிறுகதைகளும் சந்தேகமில்லாமல் வாய்மொழி மரபில் வளம் பெற்றுள்ளன. இவைகளின் தனித்துவம் அதைச் சிறப்பாகக் கையாளுபவர்களின் கைகளில் தங்கியுள்ளது. இக்கட்டுரையில் ஆபிரிக்க இலக்கிய வரைமுறை விபரங்களும் அதன் கலாச்சார பின்னணிகள் மாத்திரமே பேசப்பட்டன. ஆபிரிக்க எழுத்துக்கள் அதன் வாழ்க்கைச் சரித்திரம்  போன்றன. ஆபிரிக்க இலக்கியம் அதன் உட்பொருளின் அடிப்படையில் மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது.

1. வெளியார் ஆதிக்கத்திற்கு உட்பட்டதிலிருந்து தேசிய இயக்கங்கள் தோன்றும்    வரையான காலம்.
2. தேசிய விடுதலைக்காலத்திலிருந்து அரசியல் விடுதலை பெறும்காலம்
3. விடுதலைக்குப் பின் உள்ள காலம்.

அச்சுபே, கூகி ஆகியோரின் எழுத்துக்கள் மிகச்சரியாக இந்த வரையறைகளுக்குள் வருகின்றன. விடுதலைக்குப்பின் ஓர் ஆட்சி, அதிகாரம், மோசடி, அதிகாரப்போட்டி, வன்செயல், இராணுவச் சதிகள் ஆகியவையாக சக்கரம் சுழன்று மக்களின் வாழ்வும் வளமும் நைந்து போயின. பொய்மையும் பித்தலாட்டமும் எங்கும் தாண்டவமாடின.

சொயிங்கா, கூகி போன்ற நாவலாசிரியர்கள் தம்முள் ஒன்றிணைந்து வாழக்கூடிய நாடோடி சமூகங்களை சித்தரிப்பதனு}டாக எதிர்காலத்தையும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். சொயிங்காவினதும், கூகியினதும் அவ்வாறான நாடகங்கள் முறையே அனோமியின் பருவகாலம், இரத்தத்தின் இதழ்கள் ஆகும். இவ்வாறு எழுத்தாளர்கள் தமது நாட்டின் உண்மையான விடுதலைக்குப் போராடுவதால் ஆபிரிக்க இலக்கியம் அரசியல் தன்மை கொண்டதாக இருக்கிறது.

அவர்கள் தமது சமூகக் கடமையில் நம்பிக்கை கொண்டுள்ளனர். கடைசியாக நாங்கள் கிழக்காபிரிக்கா கவிஞர்; ஒகல்லோ ஓக்குஷயின் குரலைக் கேட்போம்.

பட்டினியால் கழைத்து நிற்கும் தொழிலாளர்
ஆக்க எழுத்தாளரிடம் கேட்பதோ அதிகம்
அது றோமியோவின் மெல்லிய காதுகளுக்கு கேட்கும்
யூலியட்டின் அழைப்புக் குரலைவிட அதிகம்

எழுத்தாளனே உனது குழந்தைகள் நேபாம்
குண்டுகளால் பொசுக்கப்படுகிறார்கள்

(இக்கட்டுரையை எழுதிய செனதொரதெனிய அச்சுபேயின் ‘கடவுளின் அம்பு' கூகி தியங்கோவின்; ‘கோதுமையின் ஒரு மணி’ ஆகிய படைப்புக்களை சிங்களத்திற்கு மொழி பெயர்த்தவர். இவர் தனது நைஜீரிய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கார்மட்டான் என்னும் நாவலையும் சிங்களத்தில் எழுதியுள்ளார். இவர் ஆபிரிக்க இலக்கியம்பற்றி சிங்களத்தில் பல கட்டுரைகளையும் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

 




     இதுவரை:  24716306 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4139 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com