அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பத்துமா - நாடகப் பிரதி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தா.பாலகணேசன்  
Thursday, 08 July 2004

(இந்தப்பிரதி பட்டறை ஒன்றின் மூலம் உருவாக்கப்டபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியான வில்தானூஸ் கிராமத்தில் உள்ள தமிழ்ச்சோலை மாணவர்களுக்கு நாடகப்பயிற்சி அளிக்கும் வகையில் தா.பாலகணேசன்  இப்பட்டறையை நடாத்தினார். அதில் வடிவம் பெற்ற இந்த நாடகம் பின்னர் தமிழ்ச்சோலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் அரங்கேறியதுடன் பலரின் பாராட்டையும் பெற்றது. இப்போது பிரதியாக வாசிப்புக்கு முன்வைக்கப்படுகின்றது. இந்த நாடகப் பட்டறையின் வெற்றி பாரிசில் தமிழர் நிகழ் கலைக்கூடம் அமைய வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது)

 
(நாடகத் தயாரிப்பின்போது பயிற்சியாளரும் மாணவர்களும்)

பாத்திரங்கள்

பத்துமா: 40 வயது. நடுத்தரக் குடும்பம் பிரான்சில் வீடு வாங்கி இருக்கிறார். துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தவர் தறபோது வேலையால் நிறுத்தப்படடுளளார். இவருடைய கணவன்  கண்ணாடி துப்பரவு தொழிலாளி.

சித்திரா: வயது 37. திருமணமானவர். 2 பிள்ளைகள். இவருடைய கணவன் றெஸ்றோறன்ரில் வேலை செயகிறார்.

செல்வி: வயது 40. திருமணமானவர். 2 பிள்ளைகள். கணவன்  வேலையில்லாமல் இருக்கிறார்.

கற்பகம்: வயது 42 திருமணமானர். 3 பிள்ளைகள் இவருடைய கணவன் றெஸ்றோறன்ரில் வேலை செய்கிறார்.

சுந்தரி: வயது 39. திருமணமானவள். 3 பிள்ளைகள்.

ராஜா: வயது 48. குடும்பம் நாட்டில், அண்மையில் நாட்டில் இருந்து வந்தவர்.

அம்மணி எக்ஸ்: மேற்பார்வையாளர். வயது 40. நாடு தெரியாதவர்.


காட்சி ஒன்று

பாரிஸின் தெரு வீதி ஒன்றில் 2003 செப்தெம்பர் மாதம் கோடையும் வசந்தமும் முடிவுறும் காலம். வெளியில் பனிப் புகாராக இருக்கிறது. பறவைகளின் கீச்சொலிகள் கேட்கிறது. காற்று ஊ..... என்ற இரைச்சலுடன் பாதசாரிகளின்  முகத்தில் மோதிச் செல்கிறது.  (மெற்றோக்களினதும் ரயில் வண்டிகளினதும் ஏனைய வாகனங்களினதும் போட்டி போட்டுக் கொண்டு ஓடுவது போன்ற இரைச்சல் தூரத்தே அமுங்கிக் கேட்கிறது). இருமல் சத்தத்துடன் ஒரு பெண் தெருவில் (மேடையை நோக்கி) வருகிறாள். அவள் பின்னே ஒரு குழந்தை பின் தொடர்ந்து கொண்டு வருகிறது. (அவளது மன உணர்வை வெளிப்படுத்தும் விதமாய் இசை மாறுகிறது.) அவள் மனதுக்குள் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுக்கிறாள் பின் மெல்ல சத்தமாக வாய் விட்டு பாடுகிறாள். ஒருவர் குப்பை வண்டிலைத் தள்ளிய படி நடந்து கொண்டிருக்கிறார், பின்னர் மெது மெதுவாக பலர் வந்து சேருகின்றனர்.
 
அவர்களில் ஒருவர் அலையும் முகில் கூட்டங்களை அண்ணாந்து பார்த்தபடி நடந்து கொண்டிருக்கிறார். ஒருவர் தலையை தொங்கவிட்டபடி நடந்துகொண்டிருக்கிறார்.
அவர்களில் ஒருத்தி பாட்டு கேட்டபடி, மெல்லிய ஆட்டத்துடன் போகிறாள்.
அவர்களில் ஒருத்தி கைத்தொலைபேசியில் கட்டளையிடும் தோரணையில்  நடந்துகொண்டிருக்கிறாள். அவர்களில் ஒருவன் 'எனக்குப் பசி' என எழுதிய துண்டொன்றைக் கழுத்தில் மாட்டியபடி பிச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறான்.
அவர்களில் ஒருவன் பத்திரிகையைப் புரட்டி படித்தபடி போய்க்கொண்டிருக்கிறான்
அவர்களில் ஒருவன்  வீதியைத் துப்பரவு செய்கிறான். அவசர அவசரமாக எல்வோரும் ஓடுகிறார்கள், நடக்கிறார்கள். ஒரே பரபரப்பாக இருக்கிறது இயந்திரத்தனமான இயக்கம் சுற்றிச் சுழன்று சடுதியாக ஓய்கிறது..

பாடல்: (வில்தனுஸ் தமிழ் சோலை ஆசிரியர்களால் இயற்றப்பட்டு பாடப்பட்ட பாடலாகும்)

ஈழம் எங்கள் தாயகமாம்
இயற்கையான ஊர் வளமாம்
பேர் விளங்க உறுதிகொண்டு
பாரினிலே வாழ்வோம் நாங்கள்

தந்தனத் தானே தந்தானா அடித்தந்தனநானா
தந்தன நானா தானை தந்தநனானா

எட்டுத் திக்கும் அகதியாக
விதைத்து கிடக்கும் தமிழர் நாங்கள்
அவல வாழ்க்கை போது மென்று மனம்
திரும்புவோமே உணர்வுகொண்டு 

தந்தனத் தானே தந்தானா அடித்தந்தனநானா
தந்தன நானா தானை தந்தநனானா

பயணிகளாக நடித்தவர்களில் ஒரு பகுதியினர் கலைந்து போகிறார்கள். பயணிகளாக நடித்தவர்களில் ஒரு பகுதியினர், தொழிலாளர்களாக பாத்திரம் ஏற்கிறார்கள்.



காட்சி இரண்டு


அதி காலை பொழுதில் பாரிஸ் புற நகர் பகுதி ஒன்றில் உள்ள அலுவலகங்கள்
நிறைந்த கட்டிடத் தொடரில் 57வது சிறிய மண்டபத்துள் துப்பரவு செய்யும்
தொழிலாளர்கள் தமது தொழில்களில் ஈடுபட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

தந்தனத் தானே தந்தானா அடித்தந்தனநானா
தந்தன நானா தானை தந்தநனானா (இசை ஒலித்துக்கொண்டிருக்கிறது)

செல்வி:- நடுவில் நின்று தும்புத் தடியால் நிலத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறார்.

சிந்துஜா:- நிலத்தை ஈரத் துணியால் துடைத்துக்கொண்டிருக்கிறார்

சுந்தரி:- நிலத்தை துப்பரது செய்துகொண்டிருக்கிறார்

ராஜா:- கண்ணாடிக் கதவுகளை கழுவித் துடைத்துக்கொண்டிருக்கிறார், இடைக்கிடையே குப்பைகளை எடுத்துப் போடுகின்றார்

சித்திரா:- அலுவலகத்தின் மேசை கதிரைகளை தூசு தட்டித் துடைத்துக்கொண்டிருக்கின்றார்

கற்பகம்:- (விரக்தி கலந்த சிரிப்பு) சிரிக்கிறாள் ........ சீமை வாழ்க்கை ! பாவி போற இடம் பள்ளமும் திட்டியும் .....
 
சுந்தரி:- பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்

ராஜா:- சாண் ஏற முழம் சறுக்குது. இது தான் நம்மட கதை!

சித்திரா:- அழுதும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்!

செல்வி:- (பெருமூச்சுடன்) யாரோடு நோவேன் ! யாருக்கு எடுத்துரைப்பேன் !

கற்பகம்:- ........... இந்தக் கதை தான் என்ர கதையும். நாலரை மணிக்கு அலார்ம் வச்சு எழும்பி, முதல் இரயிலைப் பிடிப்பதற்கு à®“ட்டமும் நடையுமாவெல்லோ வரவேண்டியதா இருக்கு. à®•à¯à®³à®¿à®°à¯à®•à¯à®• உடம்பும் ஏலாமக் கிடக்கு. இழுத்துப் பறிச்சுக்கொண்டு à®µà®°à®µà¯‡à®£à¯à®Ÿà®¿à®¯à®¤à®¾à®•à¯à®•à®¿à®Ÿà®•à¯à®•à¯. பந்தயக் குதிரை போல மூச்சிரைக்க ஓடு எண்டு à®†à®°à¯ சாபம் போட்டிச்சினமோ. எல்லாம் அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

சுந்தரி:- நீ எண்டாலும் நாலரைக்கு எழும்புகிற - நான் மூண்டு மணிக்கு எழும்பி சமைச்சு, பாத்திரங்கள் தேச்சு, பிள்ளையளுக்கு உடுப்பெடுத்து வைச்சு, அலார்ம் à®µà¯ˆà®šà¯à®šà¯,  EDF-GDF à®¤à¯à®£à¯à®Ÿà¯, அந்தத் துண்டு, இந்தத் துண்டு எண்டெல்லாம் எடுத்து வைச்சு...... அதையேன் கதைச்சு இருக்கிற விசரக் கூட்டுவான் விடு. எனக்கு ஒரு மனுசன் இருக்கிறேர்  போதாக்குறைக்கு அவருக்கு தேத்தண்ணியும் ஊத்தி வைச்சிட்டு வர  வேண்டியதா இருக்கு. நான் கத்திறது கழுதையில மழை பெய்தது மாதிரி நல்லாக் குறட்ட விட்டு நித்திரைக் கொள்ளுவேர். அந்த ஆள எழுப்பேலாது எழுப்பிறதிலும் பாக்க நாமளே செய்து போடலாம். மாடாய் அடிச்சுக் குடுத்து மாய்கிற சீவியம் எண்டுறதுதான் சிரிப்பாய்க் கிடக்கு.

கற்பகம்:- ஏன் உன்ர பிள்ளையள் பெரிய பிள்ளையள் தானே ? உனக்கு   ஒத்தாசையா இருக்குங்களே

சுந்தரி:- ஓ! ஓ! பெரிய பிள்ளையள் தான் ஆனால் குனிஞ்சு ஒரு தும்பும்  எடுக்காதுகள்.

கற்பகம்:- ஒரே தும்படியாக் கிடக்கு..... சுந்தரி ! எங்க பத்துமா ? இன்னும்   வரேல்லையா என்ன நடந்தது ?

சுந்தரி:- மூண்டு மாதமா அவளைக் காணேல்ல....... ஒண்டுமாத் தெரியேல்ல

கற்பகம்:- அப்ப அவளின்ர வேலையெல்லாம் நாங்களா செய்கிறது ?  இது நல்ல முறியல் தான்

சித்திரா:- அப்ப அந்த ரூம் எல்லாம் யார் கிளீன் பண்ணிறது? லிப்ற் கூட வேலை   செய்யேல்ல

ராஜா:- அதுக்குத் தானே நான் ஒரு செக்கு மாடு இருக்கிறன் (பாடிக்கொண்டு பூவல் சாக்குடன் அழுக்குகளை பெருக்கி வருகிறார்)

தூசு தட்டிப் பெருக்குவன்,
ஊத்த போக்கி துலக்குவன், 
கண்ணாடி மாளிகையெல்லாம் கழுவி மினுக்குவன்.
நாற்றம் எடுக்காம நான் நல்லா   உழைச்சிடுவன்.
நான் நல்ல துப்பரவுத் தொழிலாளி

கற்பகம்:- பத்துமாவுக்கு ஏதேனும் வருத்தமெ ?

செல்வி:- அவளுக்கு ஒரு வருத்தமும் இல்ல, அவளின்ர புருசனுக்கு தான் ஏதோ வருத்தமாம். கண்ணாடி கிளீன் பண்ணுறதுக்காக ஏணியில் ஏறும் à®ªà¯‹à®¤à¯ வழுக்கி விழுந்து படு காயமாம். அண்டேக்கு மழை வேறையாம் Accident Travail யில கொஸ்பிட்டலில படுத்திருக்கிறேர். பத்துமா அவரைப் போய் பார்த்திட்டு ஒரு ஐஞ்சு நிமிசம் பிந்தி வந்ததற்காக  தாறு மாறாகப் பேசிப் போட்டாளாம். நெடுகவும் அங்க தூசி கிடக்கு, இங்க à®¤à¯‚சி கிடக்கு, அது ஊத்த, இது ஊத்த, எல்லாம் ஊத்த எண்டு கத்தினாளாம். ஒரு மனுசியாக் கூட கணக்கு எடுக்க மாட்டாளாம். ஒரே நொட்டையும் சொட்டையும் சொன்னபடி இருப்பாளாம் பத்துமா சொல்லி அழுதாள்.

கற்பகம்:- அழுதவளா ?

சுந்தரி:- அழுதவளா ?

செல்வி:- ஓ! அழுதவள் நெடுகவும் பின்னாலையும் முன்னாலையும் திரிந்த படி  இருப்பாளாம். எங்கையும் ஆதரவில்லாமல் தவிச்சு இருக்கிறாள். அவளுக்கு வாழ்க்க துன்பக் கேணியா மாறிப் போச்சு! எல்லாம் ஒரே நேரத்தில வந்து தலையில இறங்கினா அவளும் எப்படித்தான் தாங்குவாள்! வீட்டிலையும் நிம்மதியில்ல, வெளியிலையும் நிம்மதியில்ல, வேலையிலையும் நிம்மதி இல்ல. அந்தக் à®•à®®à¯à®ªà®³ à®µà®¿à®°à®¿à®ªà¯à®ªà®¿à®² à®•à®¾à®²à¯ அடையாளம் கிடந்திருக்கு. அதுக்கு கூப்பிட்டு கிழிச்சாளாம். வேண்டாப் பெண்டாட்டிக்கு கால் பட்டால் குற்றம் கை பட்டால் குற்றம் எண்ட கதை தான் அவளின்ர கதை.

கற்பகம்:- (மனதுக்குள் அவளை நினைத்தபடி, இது எங்களுக்குப் போதுமா என்ற தொனியில் கேட்கிறாள்) பத்துமா !!!?

சுந்தரி:- (இது தீயாக மூளுமா ஏன்கிற தொனியில் கேட்கிறாள்) பத்துமா!!!?

செல்வி:- (ஓ ! எனது அருமைச் சகோதரியே என விழிக்கும் தொனியில் ) பத்துமா!!!

 

 

காட்சி மூன்று

 

தூதுரைக்கும் பருவம் கி.பி அரவிந்தனின் கனவின் மீதி கவிதைத் தொகுப்பில் இருந்து)

பயணிகளின் சூறாவளிக்குள் அகப்படுகிறார்கள்
(காட்சிப் படுத்தல்)

(திசைகள் அற்று வேகமாக அள்ளுண்டு  ஓடவதைப் போல ஓடுகிறார்கள். சூறாவளி அவர்களை அலைக்கிறது, உலைக்கிறது. திடீரென அந்தப பயணிகள்  அசைவற்று நிற்க) அவர்களில் ஒருவனான ஒரு புலம் பெயர் பயணி:-  
             
                 வரும்
                 வழமை தானாம்
                 ஆனாலும் என்னே சீற்றம்


(பயணிகள் குதிரைகளைப் போன்று ஓடுகிறார்கள், மரமாக மாறுகிறார்கள்)


இரண்டாவது பயணி:-  பிடரி சிலிர்த்த
                 கடுகதிக் குதிரையாய்
                 மரங்களிடை ஏறி அலைகிறது
                 அது ஊளையிட்ட படி

 

(பயணிகள் சாதாரணமாக நடந்து போகிறார்கள் . திசைகளை வெறித்துப் பார்க்கிறார்கள்.
சு10றாவளி சுழன்றடிக்கிறது. மண்ணிலிருந்து எழும்பி வானத்தில் மிதந்து கொண்டிருப்பது போன்ற மாடித் தொடர்களைப் பார்க்கிறாள் அவர்களில் ஒருத்தி.)


மூன்றாவது பயணி:-

மண்டிக்கிடக்கும்  மாடித் à®¤à¯Šà®Ÿà®°à®¿à®Ÿà¯ˆ
               சூழ்ந்து துழாவி யன்னல் செட்டைகளை
               செவிப்பறையதிர ஓங்கி அறைகிறது
               அது உலுப்பியபடி

 

(அலைக்கழிக்கப் படும் பயணிகள் வேகமான ஓட்டத்துள் அகப்பட்டு திசைகளெங்கும் சிதறி விழுகிறார்கள் . விழுந்துக் கிடக்கும் பயணிகளை பார்த்த வண்ணம் கேட்கிறாள்) 

                     
நான்காவது பயணி;:-               


                     அள்ளப் புழுதியில்லையா ?!
                     அள்ளப் புழுதியில்லையா ?!!
                     அள்ளப் புழுதியில்லையா ?!!!


(அவள் போர்க்களத்துள் நுழைந்தவளைப் போன்று நடக்கிறாள் )
                
                    பழுத்து விழுந்ததை சருகானதை


(சின்னம் சிறிய பயணியை மடியில் ஏந்துகிறாள் தாய்மை உணர்வு பொங்கக் கேட்கிறாள் )

                  ஒத்திப் பறித்த பச்சை இலைகளை
                  வாரிச் சுருட்டி இடம் பெயர்க்கிறது
                  அது திசையற்றபடி...

(பயணிகள் மெல்ல எழும்புகிறார்கள் )

                  முகத்தில் மோதி
                  மயிர்க்காலைச் சிலுப்பி
                  தூசுப்படலத்தை உள்ளுறிஞ்சி
                  சட்டெனச் சுழித்து கொட்டுகிறது
                  அது எதிர்பாராத படி 

(எல்லாப் பயணிகளும் )

                  அலையும் சுழிப்பு வீச்சிழக்கும்
                  நளின நெளிப்பில் அழகு காட்டுகிறது
                  சனியன் பிடித்த காற்று !!!........................!!!!!!!!!...............

நான்;காவது பயணி:- (தனது துப்பரவு வேலையை நோக்கி வருகிறாள் அதேபோன்று      எல்லாப் பயணிகளும்  தொழிலாளர்களாக மாறுகிறார்கள்)
 
                  இந்தக் காற்றிடமும், (பயணிகளைப் பார்த்தபடி)
                  காற்று அள்ளிய தூசுப் பட்டாளத்திடமும்
                  தொக்கி நிற்கிறது பருவத்தின் தூது.

ஐந்தாவது பயணி:-  (வெளியில் சன்னலை எட்டிப் பார்த்தபடி)

                 முடிவுறுவது கோடை வசந்தமாம்
                 வரப்போவது பனிக்குளிராம்
                 கூடவே இருளுடன்...!
                 தயார்தானா நீங்கள...?

 

காட்சி நான்கு


இசை மாறுகிறது.

அதிகாரத்தோரணையில் மிக எடுப்பாக, மற்றவர்களை சற்றும் மதியாமல்
ஒரு பெண் அந்த 57வது மண்டபத்துள் நுழைகிறாள்
தொழிலாளர்கள் புதிய வேகமான தாளக் கட்டுள் வேலை புரிகிறார்கள்.

மண்டபத்துள் நுழையும் பொழுது அந்த பெண்ணின் மீது தூசும், தண்ணீரும் அவள் மீது படுகிறது. அதே வேகத்தில் பின்னுக்கு போனவள்  கோபமாக முறைத்துப் பார்க்கிறாள் .
பின்னர் மண்டபத்தை சுற்றி நோட்டமிட்ட படி குறிப்பெடுத்த படி போய் வருகிறாள். ஒவ்வொரு தொழிலாளரையும் சென்று பார்க்கிறாள்.
ராஐரவிடம் போகிறாள் (chefன் உரையாடல் பிரெஞ்மொழியில்தான் இடம்பெறுகின்றது)

Chef:-   மேலே யெல்லாம் தூசு பிடிச்சிருக்கு துடைக்கக் கூடாதே!

ராஐர:- எட்டாது

Chef:-  ஏணி வச்சுத் துடையும்;, பிறகு ஏணிய துடைச்சு வைய்யும் 

ராஐர:- Oui madame, oui oui (ஓம் அம்மணி ஓம் ஓம்)

Chef:-  (சுந்தரியிடம்) இங்க ஊத்தையாக் கிடக்கு, அங்கால நொட்டிக்கொண்டிருக்கிற

Chef:-  (கற்பகத்திடம்) என்ன பிடிக்கிற ? என்ன பிடிக்கிற ?

Chef:-  (சித்திராவிடம்) அடக் கடவுளே ! Mon dieu !! (என் கடவுளே)
       இவ்வளவு மருந்த ஊத்தினா உன்ர அப்பரே காசு தாறுது
       கொஞ்சமா விட்டு துடச்சாலும் நல்லா மினுங்கும் 
 
(சின்ந்து கொள்ளுகிறாள்)

Chef:-  செல்வியிடம் போகிறாள் அப்போது அவள் தும்புத்தடி பழுதாகி  à®¤à¯‡à®žà¯à®šà®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à®¾à®• சொல்கிறாள்.

செல்வி:- தும்புத்தடி தேஞ்சு போச்சுது மாத்த வேணும்

Chef:-   à®“! நீயும் தான் தேஞ்சு போன  உன்னையும் மாத்த வேணும்
     தும்புத் தடி மாத்தவேணுமாம் தும்புத்தடி ........

சுந்தரி (Chef இடம் தனது தும்புத் தடியும் தேய்ந்து போனதாக காட்டுகிறாள்)

Chef:-  உமக்கும் அதே பதில் தான்

Chef:-   à®Žà®©à¯à®© பூவல் எல்லாம் இந்த நாத்தம் நாறுது, யார் இந்த பூவல் எல்லாம் எடுக்கிறது ?

ராஐர:- நான் தான்

Chef:-     அது சரி என்ன அந்த மிசினில அடிக்கடி கபே அடிச்சுக் குடிக்கிறீராம் இனிமேல் அந்த  à®®à®¿à®šà®¿à®©à®¿à®² கபே அடிச்சுக் குடிக்கக் கூடாது அது எங்களுக்கு மட்டும் தான் என்ன விளங்குதா ?

ராஐர:- non non ! moi bois pas (இல்லை இல்லை நான் குடிக்கவில்லை)

Chef:-  D’accord d’accord (சரி சரி)
            (செல்வியிடம் போகிறாள்) என்ன வக்கன்சில போய் வந்த பிறகு உடம்பு வளைய கஸ்டமாக கிடக்குப் போல 

Chef:-  (ராஐரவிடம போகிறாள்) பத்துமா இனி வேலைக்கு வர மாட்டா அவளின்ர வேலையெல்லாம் இனி நீ தான் செய்ய வேண்டும் என்ன தெரியுதா ?

சுந்தரி தும்புத் தடியை நிலத்தில் குறுக்கே போடுகிறாள்.  நிலத்தில் ஒட்டியிருக்கும் சுவிங்கத்தை கிண்டி எடுப்பதுபோல பாவனை செயகிறாள.

Chef:-   (தட்டுண்டு நிலத்தில் விழ நேர்கிறது
     சுந்தரியை கோபமாகப்  பார்த்து) - நீ என்னை ஐந்து மணிக்கு பணியகத்தில் வந்து
     பார்க்கிறாய் !

கற்பகத்திடம் - உன்னைப் பிறகு பார்த்துக் கொள்ளுகிறன்

சித்திரா - என்ன அடிக்கடி பிந்தி வாற பத்துமாவுக்கு நடந்தது தெரியும் தானே 24 மணி நேரமும் கதவு திறந்து கிடக்கு விருப்பமில்லை யென்றால் போகலாம்
 
(24/24 la porte est grande ouverte dacord tout le monde ?
Saleté Saleté Saleté Saleté Saleté Saleté!!!) 
கத்துகிறாள்

காட்சி ஐந்து 

 

சுந்தரி:- மேற்பார்வையாளரைப் போன்று அபிநயம் காட்டி நடக்கிறாள்
 
நிவேதிகா:- கொஞ்ச மருந்த விட்டு வடிவா துடைக்கட்டாம்! என்ன கையாலையே துடைக்கிறது.!!

செல்வி:- தும்புத் தடி தேஞ்சா மாத்தத்தானே வேணும் அதுக்கு எண்ணவெல்லாம்  கதைக்கிறாள். நீயும் தான்  தேஞ்சு போன..... எனன இளக்காரம் அவளுக்கு.

ராஐா:- நான் சொன்னது சரியாப் போச்சு பார்த்திங்களே!
     பத்துமாவின்ர வேலை என்ர தலையிலையும் தான்

 

காட்சி ஆறு

இசை மாறுகிறது
(பத்துமா ஒரு கடிதத்துடன் மண்டபத்துள் நுழைகிறாள்)

சுந்தரி:- இஞ்ச பத்துமாவ! (ஆச்சரியத்துடன்)

சித்திரா:- (பத்துமாவைப் பார்க்கிறாள்)

செல்வி:- என்ன பத்துமா ! கன நாளாகக் காணேல்ல உன்னை .....

பத்துமா:- (கோபமாக) அவள் எங்க ?

(எல்லோரும் வேலைகள விட்டிற்று  பத்மாவோடு உரையாடுகிறார்கள்)

செல்வி:- ஏன் ? .... இப்ப தானே அவள் வந்திட்டுப் போறாள் நீ என்னத்துக்கு  அவளைத் தேடுகிற

பத்துமா:- (பத்துமா கடிதத்தை காட்டுகிறாள்.) 

செல்வி:- (பத்துமாவிடம் பிரெஞ்சு மொழியில் எழுதியிருக்கும் கடிதத்தை வாங்கி வாசிக்கிறாள்)

Ménage à gogo
13 rue
Jean luck,
7,5 0000 Sorka Pouris
Mme Batma
19 rue
Esgalève
65000


 En raison d’une faute grave de Mme Batma, elle est renvoyée du Travail de la Société Ménage à Gogo car elle ne travaille pas bien, souvent  des traces de pas sur le tapis, elle ne vient jamais à l’heure, toujours en retard  et cela c’est une honte pour notre société.
  Merci de votre compréhension
(கடிதம் தொழில் சட்டத்தை காட்டி வேலையில் இருந்து நிறுத்துவதாக எழுதப்பட்டிருக்கின்றது)

 

ராஐா:- இவவா பத்துமா ?

செல்வி:- ஓம் இவதான் பத்துமா

சுந்தரி:-Mais Quelle Histoire !! (ஆனாலும் à®¤à¯à®©à¯à®ªà®•à¯ கதை)

கற்பகம்:- Quelle Malheur !! (என்ன கூடாத காலம்)

சித்திரா:- oh ! la ! la !


பத்துமா:- என்ன கதை கதைக்கிற - உனக்குத் தெரியும் தானே என்ர மனுசன் அக்சிடன்ற் த்தறுவாயில கொஸ்பிற்றலில கிடக்கிறேர். பத்து மாடியில இருந்து விழுந்தவரின் நிலமை எப்படி இருக்கும் எண்டு நினைச்சுப் பார்  இஞ்ச பார் என்ன வேலையால நிப்பாட்டி கடிதம் வந்திருக்கு. இந்த வேலைய நம்பித்தான் கிறடிற் செய்து ஒரு வீட்டை வாங்கினனான். நான் என்ன செய்ய எனக்கொரு வழியும் தெரியேல்ல. யாருட்ட சொல்லி à®…à®´. கடன் காறர் நிக்க இருக்க விடுகினம் இல்லை. ரெலிபோனுக்கு மேல ரெலிபோன் அடிக்கிறாங்கள். இரவில நித்திரை கூட இல்லை.

கரண்டு பில், தண்ணி பில், ரெலிபோன் பில், அபித்தேசன் ரக்ஸ், அந்த  பில் இந்த பில், எண்டு எவ்வளவோ பில் கட்ட இருக்கு. 20 வருசமா மாடா அடிச்சுக் கொடுத்தனான். அதை அவள் ஒரு கணம் யோசிச்சிருப்பாளா ?
 
சுந்தரி:- எதுக்கும் chef à®‡à®Ÿà¯à®Ÿ போய் கதைச்சுப்பாரன்

ராஐா:- (சிரிக்கிறான்)

(எல்லோரும் பலமாக சிரிக்கிறார்கள்)

பத்துமா:- ஏன் சிரிக்கிறீங்க

ராஐா:- (நையாண்டியாக) எதுக்கும் chef à®‡à®Ÿà¯à®Ÿ போய் கதைச்சுப்பாரன்  

செல்வி:- அவளுட்ட போய் நியாயம் கேட்கிறதாவது .....
 
சித்திரா:- நியாயமாவது நீதியாவது

கற்பகம்:- (சுந்தரியைப் பார்த்து) இப்பதான் பூகம்பம் வந்து போனது மண்டு!! மண்டு!!

பத்துமா:- ஊரில அப்பா அம்மாவுக்கும் காசு அனுப்பவேணும். இனி அவற்ற தாய்      தகப்பனையும் நான் தான் பார்க்க வேண்டும். பிள்ளையள காசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டிருக்கிறன். செலவுக்கு மேல செலவு நாய்க்கு நடுக் கடலிலும் நக்குத் தண்ணி தான். தலைக்கு மேல வெள்ளம்   போன பிறகு சாணென்ன முழமென்ன
இது நான் மா விற்கப்போனா காத்தடிக்குது
உப்பு விற்கப் போனா மழை பெய்யுது
இப்படித்தான் என்ர நிலமை இருக்கு
அவருக்கு இங்க வைத்தியம் பாக்கட்டும். நான் பிள்ளையள இழுத்துக் கொண்டு   நாட்டுக்கு போகட்டோ எண்டு யோசிக்கிறன்.
இஞ்ச பார் செல்வி அவர் டொக்டரிட்ட சாகிறத்துக்கு ஒரு மருந்து தரச் சொல்லிக் கேட்டிருக்கிறேராம். மனுசன் வேதனையில துடிச்சிருக்கு. இரவில கண்ணுக்க  ஒரே புள்ளி சுத்தி வருகிற மாதிரி இருந்திருக்கு. அவருக்கு ஒரே ஊர் நினைவு தாய் தகப்பனோட இருந்தக் கதையப்பற்றி சொல்லி அழுதிருக்கிறேர் அவற்ற நண்பனோட. எங்கட கல்யாண வீட்டப் பற்றியும் கதைச்சிருக்கிறேர். பனையால விழுந்தவன மாடேறி உழக்கின கதையா என்ர கதை போயிற்று. என்ர கதை சந்தி சிரிச்ச கதையாப் போயிற்று..... (போகிறாள்)

ராஐா:- உன்ர கதை மட்டுமா?

செல்வி:- எங்கட கதையும் அப்படித்தான்

(செல்வி பாடுகிறாள்)

'ஈழம் எங்கள் தாயகமாம்
இயற்கையான ஊர் வளமாம்
பேர் விளங்க உறுதிகொண்டு
பாரினிலே வாழ்வோம் நாங்கள்

தந்தனத் தானே தந்தானா அடித்தந்தனநானா
தந்தன நானா தானை தந்தநனானா

(மீண்டும் பயணிகளாகி  எல்லோரும் தெருவால் நடந்துபோகிறார்கள்) 

 

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 

 


     இதுவரை:  24784507 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2651 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com