அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 13 June 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வரலாறு மன்னிக்குமா?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.புஷ்பராஜன்  
Monday, 14 July 2003

'வரலாறு எம்மை மன்னித்துவிடும்" இந்த வாக்கியம் மீண்டும் அரசியல் அரங்கில் ஒலித்துள்ளது. 1954ல் மொன்காடா படைத்தள (ஆழnஉயனய டியசயஉமள) விசாரணையின் போது கியூபப் புரட்சியின் தலைவர் பிடல் காஸ்ரோ (குனைநட உயளவசழ) ஆற்றிய உரையின் போது ஒலித்த இந்த வாக்கியம் மீண்டும் 17 ஐ{லை 2003ல் அமெரிக்க செனற் சபையில் அமெரிக்ககாவின் வெளிவிவகார அமைச்சர் என்ற விதமாகச் சொல்லப்படும் பிரித்தானிய பிரதம மந்திரி ரொணி பிளேயர் (வுழலெ டிடயசை) ஆற்றிய உரையிலும் ஒலித்திருக்கின்றது. இது ஒரு வரலாற்றின் முரண்நகைதான். அதியுச்ச அதிகாரங்களுக்கூடாக மாறிவரும் அரசியலில் சொற்களின் அர்த்தங்கள் சுயதேவைகளுக்காக எவ்வாறு மாற்றப்பட்டு வருகின்றது என்பதையும் இது சுட்டுகின்றது.
அமெரிக்க பிரிட்டன் கூட்டணி, ஈராக்கின் மீது நிகழ்த்திய ஆக்கிரமிப்பின் பின்னர் தமக்குச் சாதகமான புதிய ஆட்சி ஒன்றை அமைப்பது பற்றிய விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கையில் பிரிட்டனி;ல் போத்தலினுள்ளிருந்து பூதம் புறப்பட்டதுபோல் ஒரு அரசியல் விவாதம் அனலாய் எழுந்து வீசுகின்றது. மனிதகுல அழிவுகளை ஏற்படுத்தும் ஆயதங்களை(றநயிழளெ ழக அயளள னநளவசரஉவழைn) ஈராக் நாற்பத்தைந்து நிமிடங்களில் பாவிக்கும் தகைமை நிலையில் உள்ளது என்ற ரொணி பிளேயரின் போருக்கு முந்திய பேச்சின் மீதுதான் இந்த பூகம்பம்.
ஈ ராக் உண்மையிலேயே மனிதகுல அழிவு ஆயதங்களை வைத்திருந்தால் யுத்தத்தின் போது கூட்டுப் படையணிகளுக்கு எதிராக அவற்றை ஏன் பாவிக்கவில்லை? அவை ஒழித்து வைக்கப்பட்டிருந்தால் இன்னமும் ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? இக்கேள்விகள் சாதாரண மக்கள் மனதில் எழுந்து எழுந்து ஓய்வதாக இருந்தாலும் அரசியல்வாதிகள் இதனை ஓயவிடுவதாக இல்லை. ரொணி பிளேயரும் பெரும் சங்கடமான நிலையில் அவை கண்டுபிடிக்கப்படும் ஆனால் காலம் எடுக்கும் பொறுத்திருங்கள் என்றெல்லாம் கூறியபோதும் அவரை விடுவதாக இல்லை. பயப்பிராந்தியை பிரித்தானிய மக்கள் மனதில் உருவாக்கி நாட்டைத் தவறான வழியில் இட்டுச் சென்றாரா? ஈராக் மீதான போரின் நியாயப்பாடுகள் என்ன? பிரிட்டனின் இராணுவம் ஈராக்கில் நிலைகொண்டிருப்பது நியாயமானதா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.
பிரிட்டன் பிரதமர் நிலைகுலைந்திருக்கையில் அதன் பங்காளியான அமெரிக்காவில் எந்தச் சலனமும் இல்லை. அமெரிக்காவின் சட்டபூர்வமற்ற முறையில் தெரிவு செய்யப்பட்டதாச் சொல்லப்படும் ஐனாதிபதி Nஐhர்ச் புஸ் (புநழசபந டிரளா) தன்னை ஒரு நடிகராக தொலைக்காட்சியில் மூலம் நிரூபித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆயினும் அவரது மகிழ்ச்சியின் நீடித்த தன்மைக்கு ஆபத்தாக அவர் நிர்வாகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உளவு ஸ்தாபன நிர்வாகி கிறகோரி தெய்மானின் (புசநபழசல வாநைஅயin) அறிக்கை வெளிவந்துள்ளது.

'ஈராக்கின் இராணுவ அச்சுறுத்தல் பற்றிய தவறற்ற உண்மை நிலை அமெரிக்க மக்கள் முன் வைக்கப்படவில்லை.
உளவு ஸ்தாபனம் அளித்த தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஈ ராக் அமெரிக்காவிற்கோ அதன் அண்டை நாடுகளுக்கோ உடனடி ஆபத்தாக அது இருக்கவில்லை."

இது அமெரிக்க பிரிட்டன் கூட்டணிகள் தாம் யுத்தத்திற்காக வகுத்துக்கொண்ட அடிப்படைகளை இல்லாமல் செய்யக் கூடியதே. பங்குனியில் யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னால் சதாம் உலக சமாதானத்திற்கு மிகவும் ஆபத்தானவர் என்ற விதமாக அமெரிக்க ஐனாதிபதியும் பிரிட்டன் பிரதமமந்திரியும் தத்தம் பங்கிற்கு குறிப்பிட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இங்கு ஒரு கேள்வி. ஒரு மிகப் பெரிய நாடு இவ்வாறான முடிவை உளவு ஸ்தாபனங்களின் தகவல்கள் அடிப்படையிலிருந்து தீர்மானிப்பதா அல்லது தமது நம்பிக்கையின் அடிப்படையிலிருந்து தீர்மானிப்பதா? என்ற அதிர்ச்சி நிலையிலிருந்து மீள்வதன் முன் அடுத்த அதிர்ச்சியை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொனால்டி; றம்ஸ்பில்ட் (னுழயெடன சுரஅளகநடன) அளித்திருக்கிறார்.
அவரது கூற்றுப்படி 'மனிதகுல அழிவுகள் ஏற்படுத்தும் ஆயதங்கள் பற்றிய புதிய தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராகப் போகவில்லை. 2001க்கு முந்திய தகவல்களை செப்11க்குப் பின்னர் புதிய ஒளியில் பார்ததாலேயே" என்பதாகும்.

இன்னமும் மனிதகுல அழிவு ஆயதங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தம்மை ஒரு தற்பாதுகாப்பு நிலைக்கு மாற்றிக்கொள்ளும் முனைப்பே இது. மனிதகுல அழிவு ஆயதங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அது முன்னர் வைத்திருந்த ஆயதங்களின் அடிப்படையில் என்றால் ஈராக் முன்னர் குர்திஸ் (மரசனநள) இன மக்கள் மீது இரசாயன ஆயதங்கள் பாவித்தது என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகையால் அதன்பின்னால் தம்மை காத்துக் கொள்ளும் நிலையே டொனால்ட் றம்ஸ்பீல்டினுடையது. ஆயினும் இவ் 'இரசாயன ஆயதங்களின் செயற்திறன் ஐந்து வருடங்களுக்குரியதே. அதன்பிறகு அது பயனற்றது" என யோன் பில்ஐர் குறிப்பிடுகின்றார்.
இப்போது யூரேனியம் சார்ந்து அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் அபிப்பிராய பேதங்கள் முளைவிடத் தொடங்கியுள்ளன. மேற்கு ஆபிரிக்காவின் நைகரில் (Nபைநச) இருந்து ஈராக் யூரேனியம் பெற்றுக்கொண்டது என்ற தகவல் போலியான ஆவணங்களின் அடிப்படையில் அமைந்ததனால் அதனைப் பிரிட்டன் வெளியிட்ட ஈராக்கின் மனிதகுல அழிவு ஆயதங்கள் பற்றிய விபரக்கொத்தில் (னழளளநைச) சேர்க்க வேண்டாமென கூறியும் பிரிட்டன் அதனை சேர்த்துள்ளது என சிஐஏ இப்போது குற்றம் சாட்டுகின்றது. பிரிட்டன் நம்பத்தகுந்த பிரிவுகளுக்கூடாகவே அத்தகவல்களைப் பெற்றுக்கொண்டது என்றவிதமாக இப்போது கூறுகின்றது. இது தவிர அந்த விபரக்கொத்தை பிரிட்டன் தனது அரசியல் முனைப்பிற்காக வெட்டியும் ஒட்டியும் வெளியிட்டதாக ஒரு அரசியல் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆக, இரு அரசுகளும் தமது யுத்த முனைப்பிற்காகத் தகவல்களைத் திரித்து அர்த்தப்படுத்தியுள்ளதாகவும் உண்மைகளை மறைத்திருப்பதாகவும் கருதப்படுகின்றது.
இந்த அரசியல் பூகம்பத்தில் அதிகம் ஆட்பட்டவராக ரொணிபிளேயரே உள்ளார். இவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இவரும் இவருக்கு ஆதரவானவர்களும் இப்போது முன்வைக்கும் பதில்கள் முற்றிலும் வேறானவை.
அதாவது ஐ.நா.வும் ஏனைய நாடுகளும் பிரான்ஸ், யேர்மனி, இரசியா போன்றவைகளும் கூட ஈராக் மனிதகுல அழிவு ஆயதங்கள் வைத்திருந்தன என்பதை ஏற்றுக்கொண்டன. யுத்தத்தின் மூலம் ஈராக் விடுதலை அடைந்துவிட்டது. சதாமின் சர்வாதிகார ஆட்சியில் பல மனிதப் புதைகுழிகள் (ஆயளள பசயஎந) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பன போன்ற பலவீனமான பதில்களை முன்வைத்துள்ளனர்.
ஐ.நா.சபையும் ஏனைய நாடுகளும் ஈராக் இன்னமும் மனிதகுல அழிவு ஆயதங்களை வைத்திருக்கின்றனவா என நிச்சயப்படுத்திக் கொள்ளவே கான்ஸ்பிளிஸ் (ர்யளெ டிடiஒ) தலைiயில் பரிசோதனைக் குழுவை அனுப்பியது. இந்தக் குழு அனுப்பும் விவகாரமே ஆரம்பம் முதல் அமெரிக்க பிரிட்டன் கூட்டணிகளுக்குப் பிடிக்கவில்லை என்பது அறியப்படாத இரகசியமல்ல. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தமக்குப் போதிய ஆதரவு கிடைக்காத நிலையிலேயே இரண்டாவது தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு முன்னர் ஐ.நா.சபை அவமானப் படும் விதமாகத்தான் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது.
ஓரு நாடு சுதந்திரம் அடைந்துவிட்டதா இல்லையா என்பதை அந்த நாட்டு மக்கள்தன் தீர்மானிக்க முடியுமே தவிர ஆக்கிரமித்த நாடுகள் தீர்மானிப்பதில்லை. ஆக்கிரமித்த நாடுகள் தங்கள் ஆக்கிரமிப்பை நியாப்படுத்த அலங்கார வார்த்தைகளை எப்போதும் தம் கைவசம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
சதாம் ஒரு சர்வாதிகாரி என்பது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. இந்தப் பூமிப்பந்தில் பல சர்வாதிகாரிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஓவ்வொரு நாடும் தனக்கான மனிதப் புதைகுழிகளை; கொண்டுதான் இருக்கின்றன. பிலிப்பைன்சில் மார்க்கோசின் வீழ்ச்சிக்குப் பிறகு எத்தனை மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. லத்தின் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க ஆதரவு அரசுகளிடையே எத்தனை மனிதப் புதைககுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கையில் செம்மணியில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படவில்லையா? அமெரிக்காவின் குவாண்டனாமோ (புரயவெயயெஅய) சிறையில் கைதிகள் விலங்கைவிட கேவலமாக நடத்தப்படவில்லையா? பாலஸ்தீன nஐனின் (தநnin) படுகொலைகளை விசாரிக்க ஐ.நா.சபை அனுப்பிய உண்மையறியும் குழுவை இஸ்ரவேல் அனுமதிக்க மறுத்தபோது அமெரிக்கா ஏன் படை எடுக்கவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட நப்பிள்ஸ்சிலிருந்து (யேடிடநள) இஸ்;ரேல் இராணுவம் திருப்பி அழைக்கப்பட வேண்டுமென்ற அமெரிக்க கோரிக்கையைக் கூட இஸ்ரேல் நிராகரித்ததே. இவைகளுக்கான எதிர் விளைவுகள் எதுவுமே இல்லையே. இன்றைய நியாங்கள் எங்கே போனது அன்று.
'இப்போது உலகம் மேலும் பாதுகாப்பாக இருக்கின்றது. ஈராக் நல்ல நிலையில் இருக்கின்றது. இனியும் இருக்கும்" என ரொணி பிளேயர் கூறியுள்ளார். உண்மையில் அமெரிக்காவினால்தான் உலகம் இப்போது ஆபத்தான நிலையிலிருக்கின்றது. செப்.11க்குப் பிறகு தனக்குப் பிடிக்காத நாடுகளை எல்லாம் தன் இராணுவ வலிமையால் நசுக்க முடிவு செய்துள்ளது. சிறுபான்மை இனங்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதை, அரச அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதை பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்கி நசுக்கி அழிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் அமெரிக்க ஐனாதிபதி தேர்தலின் பின் இவை நடைமுறையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த போர்வெறி கொண்ட இரு அரசுகளும் எவ்வளவுதான் வார்த்தை அலங்காரங்களை அள்ளித் தெளித்தாலும் சாதாரண மக்கள் இவர்களை நம்ப மறுக்கின்றார்கள். 'வாசிங்டன் போஸ்ட்" பத்திரிகையும் ஏபிசி தொலைக்காட்சி நிறுவனமும் எடுத்த கருத்துக் கணிப்பில் Nஐhர்ச் புஸ்சுக்கு ஐனவரியில் இருந்த ஆதரவு குறைந்து விட்டதாகக் கூறுகின்றது. நீயூஸ் வீக் சஞ்சிகையின் கருத்துக் கணிப்பில் ஏழுவாரங்களுக்குள் 61வீதத்தில் இருந்து 51வீதமாக இறங்கிவிட்டது. பிரிட்டனின் டெய்லி மிரருக்காக ஐசிஎம் எடுத்த கருத்துக் கணிப்பில் ஈராக் மீதான யுத்தத்தால் ரொணி பிளேயர் தெரிந்தோ தெரியாமலோ பிரிட்டனை தவறான வழியில் அழைத்துச் சென்றுவிட்டார் என மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நம்புகிறார்கள். அத்தோடு சதாமை பதவியில் இருந்து இறக்கியதால் ரொணி பிளேயர் மீதான தமது நம்பிக்கை குறைந்துவிட்டதாக 35வீதமான மக்கள் கூறுகிறார்கள்.
இந்த இரு நாடுகளின் அரசியல் விவாதங்கள் கவனத்தில் கொள்;ளப்பட்ட அளவிற்கு போரின் போதும் அதன் பின்னரும் ஈராக்கிய மக்கள் நிலை கவனத்தில் கொள்ளப்படவில்லை. அவசியமற்ற இப்போரினால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்கள் பற்றியோ கைகால்கள் முடமாக்கப்பட்ட குழந்தைகள் பற்றியோ அனாதையாக்கப்பட்டவர்கள் பற்றியோ அழிக்கப்ட்ட சொத்துக்கள் பற்றியோ கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
தமது எண்ணெய் ஆசையை மறைத்து பொய்யான தரவுகளின் விதந்துரைக்கப்பட்ட புனைவுகளிலும் இந்தப் போர் நிகழ்ந்துள்ளது என்றே அநேகர் நம்புகின்றனர்;. கொசோவா மக்கள் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் சொலோபொடன் (ளழடழடிழனயn அடைழளநஎiஉ) போர்க்காலக் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றில் விசாரித்தது சரியே என நம்பும் நியாயத்தின் ஒளியில் ஈராக் மீதான யுத்தத்தினை ஏற்படுத்தியவர்களை எந்த நீதியின் முன் நிறுத்துவது. ஈராக்கில் தைது செய்யப்பட்ட அமெரிக்க போர்க் கைதிகளை nஐனிவா சட்டத்திற்கு அமைய நடத்தப்பட வேண்டும் அன்றேல் போர்க்குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறிய அமெரிக்கா குவாண்டனமோ சிறையில் ஆப்கானிஸ்தான் போர்க்கைதிகளை மிருகங்களைப்போல் நடத்துவதையிட்டு அமெரிக்கா எந்தவியல் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில்தான் ரொணி பிளேயரின் வரலாறு எம்மை மன்னிக்கும் என்ற வாக்கியத்தை பார்க்க வேண்டும். பிடல் காஸ்ரோவை வரலாறு விடுதலை செய்தது உண்மைதான். இவர்களை.. வரலாறு மன்னிக்குமா?

20-07-2003

 


     இதுவரை:  25114498 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5671 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com