அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 27 September 2023

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow முதல்பதிப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


முதல்பதிப்பு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Thursday, 26 October 2006

"Kumarapuram"
         by
A.Balamanoharan

First Edition
DECEMBER 1974

Published by

VIRAKESARI

 


பதிப்புரை

'நிலக்கிளி" வெற்றி நாவலை அளித்த கதாசிரியரின் எழுதுகோலிருந்து பிறந்த இன்னொரு உயரிய படைப்பு இந் நாவலாகும்.

பாலமனோகரன் தன்னுடைய முதலாவது நாவல் மூலம் ஈழத்து எழுத்துலகில் தனியிடம் பிடித்துவிட்டார் என்பது பலரது அபிப்பிராயம். அவரது இரண்டாவது நாவலாகிய 'குமாரபுரம்" அன்னாரது எழுத்து வன்மைக்கும், கற்பனைத் திறனுக்கும் இன்னொரு முத்திரையாகும்.

இளம் எழுத்தாளர் பாலமனோரனைத் தந்த வன்னி நாட்டை வாழ்த்துகின்றோம்.

அன்னரின் இலக்கியத் திறமையை ஈழத்து தமிழ் வாசகர்கள் மத்தியில் அரங்கேற்றி வைத்ததிற்காக நாமும் பெருமையடைகின்றோம்.

-பதிப்பாளர்

ஆசிரியர் முன்னுரை

மண்ணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் உண்டு. இவை இரண்டுமே மதிக்கப்பட வேண்டியவை. போற்றப்பட வேண்டியவை. மண்ணையும் பெண்ணையும் போற்றி மதிக்கும் ஒரு சமுதாயம் நிச்சயம் முன்னேற்றமடையும்.

மண் பண்படுத்தப்பட்டதானால் அது வளம் பெருக்கி பூமியின் நற்பலன்களை அளிக்கின்றது. பெண் பண்பு நிறைந்தவளானால அவள் பங்கெடுக்கும் குடும்பத்தின் வாழ்வு சிறக்கின்றது.

இந்தக் கதை என்னுடைய எண்ணத்தில் எழுவதற்கும், எழுதப் பெறுவதற்கும் காரணமாக இருந்தது மேற்சொன்ன கருத்து. இது இந் நாவலைப் படிப்பவர்களின் சிந்தனைப் பரப்பில் ஒரு சில நிமிடங்களாவது சில பிரதிபலிப்புக்களை ஏற்படுத்துமேயானால் நான் திருப்தி அடைந்தவனாவேன்.

வீரகேசரி தாபனமும் அதன் புத்தக வெளியீட்டு இலாகா அதிகாரி திரு. சி. பாலச்சந்திரனும் அளித்த சந்தர்ப்பத்தினால்தான் என்னுடைய முதலாவது நாவலான நிலக்கிளிக்குப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களும், சாகித்திய மண்டலப் பரிசும் கிடைக்கும் கிடைக்கும் பேறுபெற்றேன். நிலக்கிளியின் குறைகளைச் சுட்டிக் காட்டியும், நிறைகளைப் பாராட்டியும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்து, எனது இரண்டாவது நாவலான குமாரபுரத்தை உங்கள்முன் வைக்கின்றேன்.

வணக்கம்!

அ. பாலமனோகரன்

தண்ணீரூற்று
முள்ளியவளை
குமாரபுரம்


மேலும் சில...
வணக்கம்
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 27 Sep 2023 21:52
TamilNet
HASH(0x55e58e37f938)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 27 Sep 2023 22:38


புதினம்
Wed, 27 Sep 2023 21:53
















     இதுவரை:  24050616 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2235 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com