அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 23 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 21 arrow சாயம் வெளிறிய சீலையொன்றின் கதை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சாயம் வெளிறிய சீலையொன்றின் கதை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Thursday, 06 October 2005

1.


ஜெயகாந்தன்!
ஓரு காலத்தில் இலக்கியவட்டாரத்தில்; பலருக்கும் ஆதர்ஷமாக இருந்த பெயர். அது 1960 - 70 களில் இளம் தலைமுறையினர் பலருக்கும் உத்வேகமளித்த பெயர். எனது வாசிப்பு முழுவதும் ஜெயகாந்தனுடேனேயே சுருங்கிக்கிடந்த காலம் ஒன்றும் இருந்தது. 1995இல் எனது பாடசாலைக்கல்வி முடிவடைந்தது. அதன் பின்னர்தான் எனது எழுத்துப்பிரவேசம் நிகழ்ந்தது. உண்மையைச் சொல்லப்போனால் அந்தநேரத்தில் பெரியார், இங்கர்சால், கம்யூனிசம் என்றெல்லாம் எனது தேடல் விரிவு கொண்டதற்கு, ஜெயகாந்தனின் எழுத்துக்களே உறுதுணையாக இருந்திருக்கின்றன. பெரும்பாலும் ஜெயகாந்தனின் எல்லா எழுத்துக்களுமே எனது விழிகள் துளாவியவைதான். “அக்கினிப்பிரவேசம்”, “கோகிலா என்ன செய்து விட்டாள்” போன்ற படைப்புக்களை ஒன்றுக்கு பலதடைவைகள் படித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னிடம் ஓர் அரசியல்சார்ந்த ஊடுருவிய பார்வை இருக்கவில்லை. இலக்கியத்தை இலக்கியமாகவே பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதனால் ஜெயகாந்தனின் எழுத்துக்களுக்கு அப்பால் ஜெயகாந்தனின் பின்னணிகள் பற்றியெல்லாம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கவில்லை. பொதுவாக தமிழக எழுத்தாளர்கள் என்றாலே நம்மிடம் ஒரு பிரமிப்பும் இருப்பது வழக்கம்தானே! தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக எனது கற்றல் விரிவு கொண்ட போதுதான் அதனுடன் தொடர்புடைய பலவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்பொழுதுதான் ஜெயகாந்தன் 1987 இந்திய-சிறிலங்கா ஒப்பந்த காலத்தில் உதிர்த்த சில பொன்மொழிகளையும் அறிந்துகொண்டேன். காந்திதேசத்தின்; படைகள் நமது மக்களைக் கொன்றொழித்ததையும் நமது பெண்கள் பலரை  நிர்வாணப்படுத்தியதையும் ஜெயகாந்தன் நியாயப்படுத்தியிருக்கின்றார். நான் அதனை அறிந்துகொண்டபோதே என்னளவில் ஜெயகாந்தனின் கதை முடிந்துவிட்டது. எனது ஹீரோ காலமாகிவிட்டார். என்னளவில் ஒருவரின் முற்போக்கு முகம் என்பது நமது பிரச்சனையில் அவர் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படவேண்டியதாகும். முற்போக்குவாதம் என்பது புத்தகங்களில் மட்டும் சுருங்கிக்கிடக்கும் ஒன்றல்ல. ஆனால் தமிழக இலக்கிய உலகத்தைப் பொறுத்தவரையிலோ ஜெயகாந்தன் என்ற முற்போக்கு இலக்கிவாதியின் கதை 1975களுடனேயே முடிந்துவிட்டது.

2.

ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தி நீண்டகாலமாகிவிட்டது. ஆயினும் சமீபத்தில் ஜெயகாந்தன் ஞானபீடப்பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜெயகாந்தன் நாமம் தமிழ்ச் சூழலில் சற்று உலவியது. ஜெயகாந்தன் எந்த விருதுகளுக்கும் தகுதியுடையவர்தான். அவரது தகுதியை எவருமே குறைத்து மதிப்பிட்டுவிடவும் முடியாது. ஆனால் அந்தத் தகுதி 30வருடங்களுக்கு முந்திய ஒன்றாகும். விருதை விட்டுவிடுங்கள் அது கிடக்குது மசிர். புத்தகங்கள் முலம் எனக்கு அறிமுகமான ஜெயகாந்தன் இந்த அற்ப விருதுகளையெல்லாம் பொருட்படுத்தும் சராசரி எழுத்தாளரல்ல. ஆனாலும் அவர் இன்று ஞானபீடத்தின் ஆசியைப் பெற்றவராகியிருக்கிறார். அதற்காக காஞ்சிபீடத்தின்; ஆசியை அவர் பெறவேண்டியிருந்ததுதான் அசிங்கமாக இருக்கிறது. ஆதிக்கத்தரப்பினருடன் சமரசம் செய்தால் அது எத்தகைய நன்மைகளையெல்லாம் அள்ளிக் கொடுக்கும் என்பதற்கு ஜெயகாந்தன் எப்போதுமே நமக்கு உதாரணமாக இருப்பார். அதற்குரிய தகுதிதான் அவருக்குக் கிடைத்த ஞானபீடப்பரிசு. தமிழக இலக்கியச் சூழலைப் பொறுத்தவரையில் ஞானபீடப்பரிசு இதுவரை அகிலனுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டிருக்கின்றது. 1975ம் ஆண்டு அகிலனின் “சித்திரப்பாவை” என்ற நூலுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் விருதுக்குரிய எத்தனையோ படைப்புக்கள் இருந்தும் அவற்றுடன் ஒப்பிட்டால் எந்தத் தகுதியும் அற்ற சித்திரப்பாவைக்குத்தான்; அன்று ஞானபீடம் வழங்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே ஞானபீடத்தின் சீத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். அன்று இந்த விருதைப் பெறுவதற்கு சகல தகுதிகளையுமுடைய ஒருவராக ஜெயகாந்தனே இருந்தார். அன்று ஜெயகாந்தனைப் பார்க்காத ஞானபீடம் இன்று ஜெயகாந்தனைக் கண்டுகொண்டதன் சூட்சுமம்தான் என்ன? இங்குதான் ஜெயகாந்தனின் சமரச விளையாட்டுக்கள் புதையுண்டு கிடக்கின்றன. ஜெயகாந்தன் ஒரு காலத்தில் இடதுசாரிகளின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். அந்தக் காலத்தில் சோவியத் தனது இரண்டாவது தாயகம் என்றவர். எனினும் அந்தக்காலத்திலேயே திராவிட அரசியலை கடுமையாக விமர்சித்தவர். குறிப்பாக பெரியாரியத்தை கடுமையாக எதிர்த்தவர். அப்பொழுதே இந்துத்துவ சக்திகள் இவர் மீது ஒரு கண்வைத்துவிட்டது போலும். அந்தக்காலத்தில் பார்ப்பனிய - பணியா சக்திகள் தமிழகத்தில் ஒரு பெரியார் எதிர்பாளரைத் தேடிக் கொண்டிருந்தன. ஜெயகாந்தன் அந்தக் குறையைப் போக்கினார். இந்த இடத்திலிருந்தான் ஜெயகாந்தனின் இந்துத்துவ சமரசமும் தொடங்குகிறது. உண்மையில் ஜெயகாந்தனின் திராவிட அரசியல் எதிர்ப்பே இறுதியில் அவரை பார்ப்பணியத்தின் அடிவருடியாக மாற்றியது எனலாம். 1975இல் ஜெயகாந்தனின் “ஜயஜயசங்கரா” என்னும் நாவல் வெளிவருகிறது. அப்போதிருந்தே காஞ்சிப்பெரியவர் என்று அழைக்கப்டும் மடாதிபதி ஜயேந்திர சரஸ்வதியின் கடைக்கண் பார்வை ஜெயகாந்தன் மீது பட்டுவிட்டது. அதன் பின்னர் எழுத்திற்கு கும்பிடுபோட்டுவிட்ட ஜெயகாந்தன் இன்றுவரை பார்ப்பணிய, இந்துத்துவ சக்திகளின் ஊதுகுழலாகவே தொழிற்பட்டுவருகிறார். பின்வரும் அவரது அடிவருடிக் குரல்களை கவனம் கொள்ளுங்கள்.
“ தமிழர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டும், வீட்டிலும் தமிழர்கள் இந்தி பேச வேண்டும்”
“இந்தியக் கலாசாரத்தின் சின்னம் சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தைப் போற்றாதவன் தமிழனல்லன்”
“பெரியாரியம் காலாவதியாகிவிட்டது”
“சோசலிசத்தைவிட முதலாளித்துவம் மக்களுக்கு அதிக நன்மை செய்திருக்கிறது”
 â€œà®Žà®©à®•à¯à®•à¯ மொழிப்பற்றுக் கிடையாது”
(தமிழர் கண்ணோட்டம் மே 2005 - தணிகைச்செல்வன்)

இவைகள்தான் ஜெயகாந்தனிடமிருந்து ஞானபீடம் எதிர்பார்த்திருக்கிறது போலும். தவிர சமீபத்தில் சங்கரராமன் என்பவரை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சி சங்காராச்சாரியிடம் சிறையில் சென்று ஆசி பெற்றிருக்கிறார் ஜெயகாந்தன். இவர் சிறையில் வாழையிலையில் மலம் கழித்துக் கொண்டிருக்கிறார் என்பது வேறு விடயம்.  நீண்டகாலமாக எழுதா விரதமிருந்த ஜெயகாந்தன் சிறையில் கிடக்கும் கொலையாளியை புகழ்ந்து “ஹரஹர சங்கர” என்னும் நாவல் ஒன்றை எழுதியதன் மூலம் தனது எழுதா நோன்பிற்கு விடை கொடுத்திருக்கிறார். என்னவொரு இந்துத்துவ அடிவருடித்தனம். நான் நினைக்கின்றேன் தமிழகச் சூழலில் ஜெயகாந்தன் அளவிற்கு எந்தவொரு இந்துத்துவ பக்த்தரும்; இருக்கமுடியாதென்று. 23.04.2003 அன்று சமஸ்கிருத சேவா சமிதி ஜெயகாந்தனுக்கு நடாத்திய  பாராட்டுக் கூட்டத்தில் அவர் பேசியதைக் கேளுங்கள் புல்லரித்துப் போவீர்கள்.
“வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது பிற மொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும் பேச வேண்டும் என்கின்ற தமிழ் அறிஞர்கள் தம்மை தாமே நக்கிக் கொள்ளும் நாய்கள் சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது” 

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பலரும் சமரசம் செய்வதுண்டுதான்;. ஆனால் அந்த சமரசம் எல்லாவற்றையும் இழந்து நிர்வாணமாக நிற்க்கும் சமரசமாக இருப்பதை நியாயப்படுத்திவிட முடியாது. சிலர் சொல்லுகின்றார்கள், படைப்பு வேறு படைப்பாளி வேறு படைப்பைத்தான் நாம் பார்க்கவேண்டுமே தவிர படைப்பாளியையல்ல என்று. இவ்வாறான வாதங்களிலெல்லாம் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. என்னளவில் படைப்பிற்கும் படைப்பாளியிற்கும் இடையிலான இடைவெளி மிக்க குறைவாக இருக்கவேண்டும். அவ்வாறில்லாவிட்டால்; கதைக்கும், காட்சிக்கும் ஏற்ப மாறிக் கொண்டிருக்கும் கோடாம்பாக்க சினிமா நடிகனுக்கும் படைப்பாளிக்கும் என்ன வேறுபாட்டைக் காணமுடியும். எங்களுக்கு எதற்கு படைப்பாளி, சினிமா நடிகனே போதுமே! இது கலை கலைக்காகவே என வாதிப்போருக்கு பிரச்சனைக்குரிய ஒன்றல்ல. வெங்கட்சாமிநாதன் போன்ற பார்ப்பணிய கலைவாதிகள் ஜெயகாந்தனை இன்றும் அற்புதமென்பது இந்த அர்த்தத்தில்தான். படைப்பாளி என்பவனுக்கு ஒரு சமூகப் பொறுப்புணர்வு தேவை என்ற கருத்துடைய என்னைப் போன்றவர்களுக்கு இது பிரச்சனைக்குரிய ஒன்றாகும். இன்று ஜெயகாந்தனுக்கும் தமிழ் மசாலா சினிமா நடிகனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஜெயகாந்தன் இந்துத்துவத்;தின் ஆசிக்காக எல்லாவற்றையும் இழந்த நிர்வாணியாவிட்டார். ஜெயகாந்தனைப் பார்க்கும்போது லெனின் கம்யூனிசிம் ஒரு இளம்பருவக் கோளாறாக இருந்துவிடுகிறது எனக் கூறியதே நினைவுக்கு வருகிறது. அன்று ஜெயகாந்தன் பேசிய புரட்சி வாதங்கள் எல்லாம் ஆதிக்கத்திற்கு முன் மண்டியிட்டு விட்டன. ஜெயகாந்தனின் புரட்சிவாதம் எல்லாம் ஒரு இளம்பருவத்துக் கோளாறுதான் போலும். ஜெயகாந்தனால் புரட்சிகர உணர்வு பெற்றவர்கள் இன்று அதே ஜெயகாந்தனை விமர்சித்து நிராகரிக்கும் காலமொன்று தோன்றுமென்று நம்பியிருக்கமாட்டார்கள். நமது நம்பிக்கைகள் சிதைந்து போவதற்கு நாமே சாட்சியாக இருப்பது வேதனைக்குரிய ஒன்றுதான். அதற்காக விமர்சிக்காமல் இருந்துவிடவும் முடியாது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts) 


மேலும் சில...
நான்..
ஈழத்து மலையகக் கூத்துக்கள்
அமெரிக்காவில் அறிவியல் படும்பாடு
மோகினிப் பிசாசு
நானும் என் எழுத்தும்
நேர்காணல் ஒன்றில்:
வாழ்புலம் இழந்த துயர்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 23 May 2024 09:37
TamilNet
HASH(0x5585cfef4180)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 23 May 2024 09:37


புதினம்
Thu, 23 May 2024 09:37
     இதுவரை:  24923873 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6348 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com